2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எரிபொருள் நெருக்கடி தொடர்பாக அவசர கடிதம்

Freelancer   / 2022 ஜூலை 11 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

எரிபொருளின்றி புநகரி பிரதேசசபையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருக்கு புநகரி பிரதேச சபையின் தவிசாளர் சி.சிறிரஞ்சன் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். 

“புநகரி பிரதேசத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புநகரி, முழங்காவில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலமாக சபைக்கு தேவையான எரிபொருட்கள் நுகரப்பட்டு வந்துள்ளன. 

எனினும் கடந்த இரு வார காலமாக எமக்குரிய எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை. எமது சபையின் வாகனங்களில் இருந்த எரிபொருள் நுகரப்பட்டு இன்றுவரை மட்டுப்படுத்தப்பட்ட சேவையினை செய்து வந்துள்ளோம். இன்றிலிருந்து அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மக்களின் அன்றாட குடிநீர் விநியோகம், கழிவகற்றல் செயற்பாடுகள் நிறைவேற்ற முடியாத நிலைமைகள் எழுந்துள்ளன.  இவ்வாறான நிலைமைகளை தெளிவுபடுத்தி பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

எனினும் இன்றுவரை பதிலேதும் கிடைககவில்லை.  எமது பிரதேச சபையின் செயற்பாடுகள் எரிபொருளின்றி முடக்கப்படுமாயின் கழிவுகளினால் ஏற்படும் நோய்த் தொற்றுகள் அதன்பால் ஏற்படும் விளைவுகளுக்கு சபையால் பொறுப்பளிக்க முடியாத நிலைமைகள் எமது சக்திக்குட்பட்டதாக அமைந்திருக்கவில்லை என்பதை தங்களிற்கு அறியத்தருவதில் நான் மனவருத்தம் அடைகின்றேன்.  

எமது சபையின் செயற்பாடுகள் மிக அத்தியாவசியமானது என்பதுடன் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக மேதகு ஜனாதிபதியால் பத்திரிகை மூலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனினும் சபையின் இவ்வாறான சேவைகளை முன்னுரிமை அடிப்படையில் கருதி எரிபொருளை விநியோகிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். 

தங்களின் இலகு நடவடிக்கையின் பொருட்டு ஒரு மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவையினை கொண்டு செல்வதற்கு மிகக் குறைந்த அளவு எரிபொருள் மதிப்பீடு கீழ் தரப்படுத்தப்பட்டுள்ளன. 

அடிக்கடி தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றமையினால் இடையுறாது மக்களின் சேவையை வழங்குவதற்கு எரிபொருளை தாங்கிகளில் சேகரித்து நாளாந்த சேவைக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் ஏற்பாடுகளை செய்து தருமாறு கோருகின்றேன் எனத் தவிசாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .