2025 ஜூலை 09, புதன்கிழமை

‘ஏனைய ஆசிரியர்களது நிலுவைகளும் வேண்டும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  எஸ். ஜெகநாதன்

 

பல்வேறு கோரிக்கைகளின் முடிவில், அதிபர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவகளையும் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைகளில் முதல் கட்டமாக, ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான நிலுவைகளையும் இம்மாதம் வழங்குவதற்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஏனைய ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைகள் பிரதம செயலாளர் உறுதியளித்தபடி அடுத்த கட்டமாக வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பலதரப்பட்டவர்களிடம் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைத்து, வட மாகாண பிரதம செயலாளரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவரால் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு ஏற்ப இம்மாதச் சம்பளத்துடன் அதிபர்களுக்கான அதிகரிக்கப்பட்ட படிகளும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த சம்பள நிலுவைகளும் வடக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் வழங்கப்படவுள்ளமை மகழ்ச்சியை அளிக்கின்றது.

இன்னும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டியுள்ள சம்பள நிலுவைகள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சங்கம் கேட்டு நிற்கின்றது.

இதைவிட யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கல்விக்காக அதிகரித்த நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். அப்படியாயின் அத்தகைய நிதி வடக்கு மாகாணத்தில் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு கல்வியில் மேம்பாட்டை ஏற்படுத்தும் என நம்புவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .