2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஏற்று நீரப்பாசனத்திட்டம் புனரமைப்பின்மையால் விவசாயிகள் பாதிப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதியில் பல மில்லியன் ரூபாய் செலவில் மீள் புனரமைப்புச் செய்யப்பட்ட ஏற்று நீரப்பாசனத்திட்டம் உரிய முறையில் புனரமைக்கப்படவில்லையென, விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ்லுள்ள, விசுவமடு குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 90 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த புனரமைப்புப்பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கவில்லையென, பல்வேறு தரப்புக்களாலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குறிப்பாக, கொங்கிறீட் வாய்க்கால்கள் அமைக்கப்பட்ட போதும், வீதிகள் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால், வாய்க்கால்களைக் கடந்து பயணிப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன், குறித்த சில வாய்க்கால்கள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. இதேவேளை சில விவசாயிகள் ஏற்று நீரப்பாசனத்தை பயன்படுத்தாமலும் கைவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதுடன், அனைத்து விவசாயிகளும் ஏற்று நீர்ப்பாசனத்தை பயன்படுத்தி பயனடையும் வகையிலான திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் இப்பகுதி விவசாய அமைப்புக்கள் கோரியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .