2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஒட்டுசுட்டானுக்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ய.அனுருத்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை நேற்று (04)  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இப்பிரதேச செயலகத்துக்கு நீண்ட நாட்களாக பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாததால் உதவிப் பிரதேச செயலாளர்களே கடமையிலீடுபட்டு வந்தனர். அந்தவகையில், புதிய பிரதேச செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு இன்னும் சில முக்கிய அதிகாரிகள் இல்லாமல் இருப்பதும் சில அதிகாரிகள் வேறு பிரதேச செயலகங்களில் கடமையாற்றிக்கொண்டு இங்கு பதில்கடமை ஆற்றுவதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X