Editorial / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் மகாவலி "எல்" வலயத் திட்டமானது, தமிழினத்தைக் கட்டமைத்து அழிக்கவே செயற்படுத்தப்படுகின்றதென, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "தமிழர் நிலத்தில் தமிழர் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் மகாவலி எல் வலயத் திட்டத்தை, ஒன்றுசேர்ந்து எதிர்ப்பதற்கு", அனைவரும் ஒன்றுதிரளுமாறும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து, பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றி, தமிழர் பெரும்பான்மையை மெல்ல மெல்ல மகாவலி "எல்" வலயத்திட்டம் குறைத்து வருகிறதென, அவர் குறிப்பிட்டார்.
"மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையையே மேற்கொள்கிறது. இதில் மக்களாகிய நாம் விழிப்படையாவிட்டால், எதிர்காலத்தில் எமது இடங்கள் கேள்விக்குறியாகிவிடும்" என அவர் தெரிவித்தார்
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025