2025 மே 14, புதன்கிழமை

ஒரு வருடமாக தேடப்பட்டு வந்த நபர் கைது

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வன்முறையுடன் தொடரப்பட்ட குற்றச்சாட்டில், கடந்த ஒரு வருடமாக யாழ்ப்பாணம் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர், யாழ்ப்பாணம் - மத்தியூஸ் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், மத்தியூஸ் வீதியிலுள்ள வீடு  ஒன்றுக்குள் நுழைந்து, பொருள்களை அடித்து உடைத்து சேதம் விளைவித்து, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான அழிவினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் தேடப்பட்டு வந்துள்ளார் .

ஏற்கெனவே 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X