Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26), 37 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேரும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் 7 பேரும், டெங்கு நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 3 பேருமென, மொத்தமாக 37 பேருக்கு எதிராக, கோப்பாய் பொலிஸாரால், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்குகள், யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய 27 பேர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோடு, அவர்களில் மூவர், அரச உத்தியோகத்தர்களென்றும் பொலிஸார் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, அரச உத்தியோகஸ்தர்கள் மூவருக்கும் தலா 7,500 ரூபாய் அபராதமும் 1,500 ரூபாய் அரச செலவும் விதித்த நீதவான், அவர்கள் மூவரின் சாரதி அனுமதிப் பத்திரங்களையும், 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டார்.
மேலும், அதே குற்றச்சாட்டின் கீழ் ஆஜர்செய்யப்பட்ட ஏனைய 24 பேருக்கும், தலா 7,500 ரூபாய் அபராதமும் 50 மணித்தியாலங்களுக்குக் குறையாத சமூகப் பணியில் ஈடுபடவேண்டுமென்றும், நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, அவர்கள் 24 பேரினதும் சாரதி அனுமதிப் பத்திரங்களை, 9 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறும், நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, புதுவருட தினத்தன்று சட்டவிரோதமாக சாராயத்தை விற்பனை செய்த ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாயம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், மேலும் 5 பேருக்கு, சட்டவிரோதமாகச் சாராயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த 3 பேருக்கு, தலா 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025