2025 மே 14, புதன்கிழமை

ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாத்திரை

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபை யாழ் சின்மயமிசன் ஆலோசனைக்கமைய, நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான பேதங்கள் நீங்கி, ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாத்திரை மேற்கொள்ளவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி  கோவிலில் இருந்து சிவனொளி பாதமலை வரை, இந்தப் புனித திருத்தல யாத்திரை நடைபெறும்.

ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் இந்தப் புனித திருத்தல தரிசன யாத்திரையில் இணைய விரும்பும் அடியார்கள், பதிவை மேற்கொள்ளலாம்.

மேலுதிக விவரங்களுக்கு, 077-9236552 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரை செல்லும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X