2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘ஒற்றுமையாக பயணிப்போம்’

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 26 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யாழ்.மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டும், அபிவிருத்தியை கருத்தில் கொண்டும் அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம்” என யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சி பேதமின்றி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நகர அபிவிருத்திக்காக, ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அதனால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.

எங்கள் மாநகரத்தை பசுமையான மாநகரமாக மாற்ற வேண்டும். அதில் உறுப்பினர்களுக்கிடையில் மாற்றுக் கருத்து இல்லை. அனைவரின் இலக்கும் ஒன்று. யாழ்ப்பாணம் பழமை வாய்ந்த நகரம். இங்கு பல தொன்மையான சின்னங்கள் உள்ளன. வரலாற்று பின்னணி உள்ள வரலாற்று பொக்கிசங்களை பேணி பாதுகாத்து மதிப்பளிக்க வேண்டும். எனவே மக்களின் நலனுக்காக மாநகரத்தின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்போம்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .