2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஓடக்கரையில் 20 பேர் இடம்பெயர்வு

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

வடமராட்சி , பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 20க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 

பருத்தித்துறை, ஓடக்கரை ஜே/402 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 100 குடும்பங்கள் மழை வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி, உறவினர் வீடுகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியுள்ளனர். 

அதேவேளை, பாதிப்படைந்த மக்களுக்கு முதல் கட்டமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், அக்கட்சியின் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்ட குழுவினர், சமைத்த உணவுகளை இன்று (26)வழங்கினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .