Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி சபைகளில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மக்கள் பணி செய்வதற்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் முயல வேண்டும் என தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சுகு.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைகள் அரசியல் வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கான களங்கள் அல்ல. வட்டார, பிரதேச, நகர, மாநகர மட்டங்களில் மக்களின் ஜீவாதார நலன்களுடன் தொடர்புபட்டவை.
கடந்த, உள்ளூராட்சி சபைகள் போல கிழக்கு, வடக்கு மாகாண சபைகள் போல் குறிப்பிடத்தகுந்த எதையும் சாதிக்கமுடியாததாக இச்சபைகள் ஆகிவிடக்கூடாது. எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல் அற்ற, அர்ப்பணிப்பான சேவையை எமது மக்களுக்கு வழங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
எம்முள் நிலவும் போட்டி மனப்பான்மைகள், எமது சமூக அவலம் அதிகரித்து செல்வதற்கு வழிவகுத்தன என்பது ஜீரணிக்க முடியாத உண்மை.செய்வதை விட பேசுவது அதிகம். இந்த நிலையில் மாற்றம் வேண்டும்.
வெறிச்சோடி விடாமல், ஊர்களில் மக்கள் வாழ்வதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.
காலசூழல் சவால்களுக்கேற்ப உள்ளூராட்சியின் செயல்பரப்பும் பொறுப்பும் அதிகரிக்க வேண்டும். இங்கு வேற்றுமையில் ஒற்றுமை கண்டு செயற்படுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எமது மக்களின் அடிப்படையான பல்வேறு விடயங்களிலும் இணைந்து செயற்படுவதற்கான திறவுக் கோலாக அமையலாம்.
மக்களும் உள்ளூராட்சி சபைகளில் பரஸ்பரம் அனுசரித்து இணைந்து செயற்படுமாறு ஆணை வழங்கியுள்ளளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago