2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

காங்கேசன்துறையில் விபத்துக்களால் 22 பேர் பலி

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையப் பகுதிகளில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய போக்குவரத்துப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 28 விபத்துக்களில் 5 பேரும் நெல்லியடிப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 34 விபத்துக்களில் 3 பேரும் அச்சுவேலி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 36 விபத்துக்களில் 9 பேரும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 27 விபத்துக்களில் 3 பேரும் இளவாலைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 9 விபத்துக்களில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 2 விபத்துக்களும் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் 5 விபத்துக்களும் ஏற்பட்டபோதும், எவரும் உயிரிழக்கவில்லை.

பலாலி பொலிஸ் பிரிவில் விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X