2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காட்டிக் கொடுத்த அலைபேசி

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் இணுவில் சிங்கத்தின் கலட்டி பகுதியில் இருந்த வீட்டுக்குள் திங்கட்கிழமை (13) இரவு நுழைந்து திருட முற்பட்ட திருடனை அவனது அலைபேசி காட்டிக் கொடுத்துள்ளது.

அதனையடுத்து, குறித்த சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக தனது அலைபேசியின் இருந்த விளக்கின் ஊடாக (லைட்) வீட்டிலிருந்த பொருட்களை பார்த்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தால் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட கையில் வைத்திருந்த அலைபேசியை தவறவிட்ட திருடன் பின்னங்கால் பிடறியில்பட தப்பித்து ஓடியுள்ளான்.

அலைபேசியை மீட்ட வீட்டு உரிமையாளர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அதனை ஒப்படைத்துள்ளனர்.

அதனையடுத்து, அலைபேசியை சோதனை செய்த பொலிஸார், கந்தரோடை விகாரையடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X