2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காட்டிக்கொடுப்புக்களாலேயே தமிழினம் அழிந்தது

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கை சுதந்திரம் பெற்ற 1948ஆம் ஆண்டு முதல், தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட காட்டிக் கொடுப்பு நடவடிக்கைகளே உரிமைப் போராட்டத்தை நசுக்கியது என வடமாகாண பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உரிமைப் போராட்டங்கள் பல்வேறு இயக்கங்களில் மோதல்கள் காரணமாக காட்டிக்கொடுக்கப்பட்டு, அது முற்றாக நசுக்கப்பட்டுள்ளது' என்றார்.

'அதேபோல், தற்போதும், மாகாண சபையில் பிரித்தாளும் பிரச்சினை இடம்பெறுகின்றது. இங்கு ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் பிரச்சினை இல்லை. மாறாக ஆளுங்கட்சிக்குள் தான் பிரச்சினைகள் உள்ளன.

எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். காட்டிக்கொடுப்புக்கள் கழுத்தறுப்புக்களைவிட்டு ஒருங்கிணைந்து செயற்படவேண்டும். விடுதலைப் போராட்டம் இயக்கங்களாகவிருந்து ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது' என்று குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், 'விடுதலை இயக்கங்கள் அனைத்தும் ஒட்டுக்குழுக்களாக செயற்படவில்லை. நாங்கள் 1990ஆம் ஆண்டுக்கு முன்னரே அரசியலில் இணைந்துவிட்டோம்' என்றார்.

இதற்குப் பதிலளித்த அன்டனி ஜெயநாதன், 'விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நீண்டகாலமாக இருந்தமையால், மற்றைய இயக்கங்கள் எல்லாம் ஒட்டுக்குழுக்கள் என எனது மனதில் பதிந்து விட்டது. நான் கூறிய இந்த வசனத்தை ஹன்சாட்டில் இருந்து நீக்கிவிடுமாறு'  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X