2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கொட்டும் மழையில் நல்லூரில் கவனயீர்ப்பு

George   / 2017 ஜனவரி 26 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வவுனியாவில் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்துக்கு  இளைஞர்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுத்திருந்த நிலையில்,  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வவுனியா உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர், தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X