2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குடி நீர் விவகாரம் முதலமைச்சருடன் கதைத்து முடிவு தெரிவிக்கப்படும்

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

சுன்னாகம் பகுதியில் கிணறுகளில் உள்ள நீரை அருந்துதல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடிப்பின் முடிவு தெரிவிக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று(28) அமைச்சரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஒவ்வொருவருடைய வீட்டின் கிணற்று நீரையும் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் அந்தந்த வீட்டுக்காரர்களுக்குத்தான் தெரியும். அதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது.

ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளோம். மேற்கொண்டு பொதுவான முடிவொன்றை வெளியிடும் பொருட்டு, முதலமைச்சருடன் கலந்துரையாடவுள்ளேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X