2025 ஜூலை 19, சனிக்கிழமை

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் குடும்ப நல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள், தங்களுக்கான இடமாற்றங்களை நியாயமான முறையில் வழங்குமாறு கோரி வட மாகாண சுகாதார திணைக்களத்தின் முன்பாக புதன்கிழமை (06) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

5 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் மேற்பார்வை குடும்ப நலன் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்காதது ஏன்? திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட இடமாற்ற விண்ணப்பங்கள் எங்கே? இடமாற்ற விண்ணப்பத்தின் பிரதி இருந்தும் ஏற்றுக்கொள்ளாததன் காரணம் என்ன ஆகிய காரணங்களை முன்வைத்தே இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தங்களுக்கான உரிய தீர்வு கிடைக்காவிடின் தொடர் போராட்டம் செய்யவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X