Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சி கூட்;டுறவுச் சபை மண்டபத்தில் வியாழக்கிழமை (12) மாலை ஒன்றுகூடி காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வந்த ஐ.நா செயற்குழுவைச் சந்தித்தனர்.
8 மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 600 காணாமல் போனோரின் உறவினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.
தங்களின் உறவுகள் காணாமல் போனமைக்கு இராணுவத்தினரும் ஆயுதக் குழுக்களுமே காரணம் என்று இவர்கள் இதன்போது தெரிவித்தனர். அத்துடன் வெள்ளை வான் கடத்தல் தொடர்பிலும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் ஊடகவியலாளர் எவரும் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்களை புகைப்படம் எடுத்து வெளியிடுவது அவர்களின் பாதுகாப்பு பங்கம் விளைவிக்கும் என்பதால், ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லையென நிகழ்வை ஏற்பாடு செய்த பிரதிநிதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025