2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நேசமணி, செல்வநாயகம் கபிலன்,

காரைநகரில், களபூமி, திக்கரை முருகமூர்த்தி ஆலயத்துக்கு அருகிலிலுள்ள கிணற்றிலிரந்து 15 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் சண்முகராஜக் குருக்கள் துவாரகா (வயது 15) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார்.

சனிக்கிழமை (13) இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், சம்பவ இடத்திற்கு சென்றதுடன் சிறுமியின் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X