Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
அரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி இங்கு உண்ணாவிரதம் இருக்க, அவர்களை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக நேரில் சென்று உறுதிமொழி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தியா, டெல்லியில் இருப்பது சரியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
'ஒருவருக்கு, மருத்துவ சிகிச்சையென்பது முக்கியமானது. ஆனால், தமிழர்களின் தலைமைக் கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படுபவர், முக்கியமான மக்கள் பிரச்சினையொன்று இங்கு காணப்படும் வேளையில், மருத்துவ சிகிச்சைக்குச் செல்வது அநாகரிகமானது. இப்பிரச்சினையைத் தீர்த்த பின்னர், தனது மருத்துவ சிகிச்சைக்குச் சென்றிருக்கலாம்' என்றார்.
'கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக, சம்பந்தன், சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்குக் கூறியிருந்தார். ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. 61 கைதிகளுக்குப் பிணை வழங்குவதாகத் தற்போது கூறப்படுகின்றது. அப்படியென்றால் மிகுதிப் பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவுள்ளனரா? 5, 10 மற்றும் 20 வருடங்கள் எனச் சிறையில் இருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஆயுட்காலச் சிறைத்தண்டனை என்று கூறப்படுபவர்கள் கூட, 14 வருடங்களில் வெளியில் செல்ல முடியும். ஆனால், பல வருடங்களாக சிறைகளில் உள்ளவர்களுக்கு விசாரணைகள் நடைபெறாமல் உள்ளன' என்றார்.
'தற்போது மீண்டும், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். முழுமையான பதில் வேண்டும் என அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். கைதிகள், உண்ணாவிரதம் இருக்கக்கூடிய உடல்நிலையில் இல்லை. அவர்கள் வாழ்வா, சாவா என்னும் நிலையில் உள்ளனர். ஆகவே, சம்பந்தன் உடனடியாக இந்தியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டும்' எனக் கூறிய அவர், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய தமிழ்த் தலைமைகள் எவரும் தற்போது நாட்டில் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
konswaran saro Thursday, 12 November 2015 10:03 AM
சுரேஷ் சம்பந்தன்மேல் மட்டும் பழிபோடுவது சரியல்ல. சுரேஷும் ஒரு தலைவர். அவருக்கும் பொறுப்புண்டு. எல்லாவற்றையும் சம்பந்தன்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. சம்பந்தன் இல்லையென்றால் இனம் அழிந்துபோவதா?
Reply : 0 0
Thiyagaraja Vigneswaran Thursday, 12 November 2015 11:40 AM
தற்போதய இலங்கை அரசின் எதிர் கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் ஆரம்பத்தில் அவர் பிரதிநித்துவம் கொண்டு இருந்த TULF இல் ஒழுங்காக, உண்மையாக , அர்த்தபுஷ்டியுடன் செயல்பட்டிருப்பின் இன்றும் தமிழர் விகிதாசாரம் அப்படியே இருந்திருக்கும் . இருக்க வேண்டியவர்கள் இல்லாமலும் இல்லாமல் போனவர்கள் இருந்திருந்த்தின்றால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் .அதே போல்இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் திரு சுமத்திரனும் அப்படியனா ஒருவரே . உப்பு திண்டால் ஒரு நாள் தண்ணீர் குடிக்க வேணும்.
Reply : 0 0
S.P.Jesuthasan Thursday, 12 November 2015 02:40 PM
ஆபத்திற்கு பாவம் இல்லை !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago