2025 ஜூலை 16, புதன்கிழமை

குதிரை ஓடியவர் கைது

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

க.பொ.த சாதாரணப் பரீட்சையில் பாடசாலை உதவியாளர் ஒருவருக்கு பதிலாக பிறிதொருவர் 5 பாடங்களுக்கு பரீட்சை எழுதியமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கண்டாவளை, புளியம்பொக்கனைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதாக பூநகரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் உதவியாளராகக் கடமையாற்றும் 39 வயதுடைய ஒருவர் க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளார்.

பரீட்சை ஆரம்பமான நாட்கள் தொடக்கம், கண்டாவளை, புளியம்பொக்கனைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபர், அவருக்குப் பதிலாக கடந்த 5 பாடங்களுக்கான பரீட்சைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கணித பாடப் பரீட்சையையும் இவ்வாறு எழுதிய போது, பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டு, பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து, பரீட்சைக்கு விண்ணப்பித்தவர், பதிலாக எழுதியவர் ஆகியோர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன் பரீட்சை அனுமதி அட்டையை உறுதிப்படுத்திய சமாதான நீதவானும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X