2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

காதலனின் வீட்டில் கன்னமிட்ட பெண்ணுக்கு கடூழிய சிறை

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தாவடி பத்திரகாளி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் மற்றும் 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிப்பதாக மல்லாகம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி  வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்கமருந்து தெளித்துவிட்டு 25 பவுண் நகையைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்ற சம்பவத்திலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, தனது குற்றத்தை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டதையடுத்து, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பெண்ணின் கைவிரல் அடையாளத்தை பெற்று கைவிரல் அடையாளத்திணைக்களத்துக்கு  அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவருக்கு உதவியதாக கூறப்படும் பதுளையைச் சேர்ந்த இளைஞனின் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X