2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 51 வேலைத்திட்டங்கள்

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலி கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கிராமத்துக்கு மில்லியன் ரூபாய் வேலைத்திட்டத்தின் கீழ் 51 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, என கோப்பாய் பிரதேச செயலர் எம்.பிரதீபன் தெரிவித்தார்.

கிராம அலுவலர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் பத்து 10 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு,  கோப்பாய் பிரதேச செயலக பிரிவிலுள்ள 31 கிராம அலுவலர் பிரிவிலும் 51 வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

31 கிராம அலுவலர் பிரிவுகளில் சில கிராம அலுவலர் பிரிவுகளில் 10 இலட்சம் ரூபாய் நிதியை பங்கீடு செய்து இரண்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையிலேயே 51 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .