2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிராம அபிவிருத்திச் சங்கத்தில் நிதிமோசடி

Niroshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கம் நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கிராம அபிவிருத்திக்கென வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாயில் நூலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகம் அமைக்கும் பணிகளின்போதே, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலுள்ளவர்களால் ஒன்றரை இலட்சம் ரூபாய் நிதிமோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதி மோசடி தொடர்பாக, கிராம அபிவிருத்திச் சங்கத்தில் இருப்பவர்களினாலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X