Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 02 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த கிராமிய நீர் விநியோகத் திட்டம் தற்போது நிறைவு பெற்று, பொதுமக்களுக்கான குழாய் நீர் விநியோகம் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தின் மாதகல், சாந்தை, வட்டக்கச்சி, அக்கராயன், வை.எம்.சீ.எச் கொலனி, நெடுந்தீவு போன்ற பிரதேசங்களுக்கு குழாய்நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இத்திட்டத்துக்கு செலவிடப்பட்டுள்ளன. 2,653 குடும்பங்களைச் சேர்ந்த 13,165 பேர், தினந்தோறும் குழாய்க் குடிநீரை, இத்திட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்வார்கள்.
மிக நீண்டகாலமாக குடிநீர்ப் பிரச்சினைக்கு உள்ளாகியிருந்த நெடுந்தீவுக்கான குழாய் நீர் விநியோகத்திட்டம் வெற்றியளித்துள்ளது. கடல் நீரை சுத்திகரித்து, நவீன தொழில்நுட்ப சாதனங்களின் ஊடாகவே, இப்பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தீவுப்பகுதிக்கான குடிநீர் விநியோகம் பூர்த்தி செய்யப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இதே போல், கனகராயன்குளம் குழாய் நீர் விநியோகத்திட்டம் தற்போது நிறைவுபெற்று, இதனூடாக நீர் விநியோகம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago