2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கீரிமலை ஆலயத்தில் விசேட பூஜை

George   / 2016 மே 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கான ஆத்ம சாந்தி விசேட பூஜையும், பிரார்த்தனையும் இம்முறையும் கீரிமலை ஆலயத்தில் இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த 2009 மே 18 திகதி முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை கீரிமலையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உயிர் நீத்த தமிழ் உறவுகளின் இந்த ஆத்ம சாந்தி பிரார்த்தனை காரைநகர் மக்கள் சார்பில் கடந்த 3 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கு இவ்வருடம் யாழ். மாவட்டம் தழுவிய ஒத்துழைப்பு உள்ளது. அந்த வகையில் நாளைய தினம் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

காலை 6.30 மணிக்கு கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் விசேட பூசை ஆரம்பமாகி பிரார்த்தனைகள் இடம்பெற்று உயிர் இழந்த உறவுகளுக்கான அன்னதான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் உறவுகள் முள்ளிவாய்க்கால் சென்று தமது அஞ்சலியை செய்வதற்கு அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நிலத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவது இவ்வருடமே இறுதியாக இருக்கட்டும், எதிர்வரும் வருடம் இதற்கான தூபி, மண்டபம் அமைக்கப்படாவிட்டால் மறைந்த அமைச்சர் மகேஸ்வரனின் குடும்பம் சார்பில் முள்ளிவாய்காலில் அஞ்சலி தூபியும், மண்டபமும் அமைப்பதற்கான ஏற்பாடு அனைத்தும் செய்யப்பட்டு  2018ஆம் ஆண்டு அஞ்சலி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X