Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கீரிமலையில் காணி இல்லாதவர்களுக்கு, காணியுடன் கூடிய வீடமைக்கும் பணி, இராண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை அண்டிய அரச காணியில், ஏற்கெனவே 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த வீட்டுத்திட்டத்துக்கு “நல்லிணக்கபுரம்” என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முகாம்களில் வாழும் மேலும் 31 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் குறித்த வீடு அமைக்கும் பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணி அற்றவர்களுக்கு காணியும் வழங்கப்பட்டு வந்ததுடன் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago