Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரை இலங்கையின் எப்பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸாரும் கைது செய்ய முடியும்.குறிப்பிட்ட பொலிஸார் தான் கைது செய்ய வேண்டும் என்ற சட்டவரையறை இல்லை என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு திங்கட்கிழமை (28) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது,சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்கு வந்திருந்த வேளையில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸார் என்னை விடுதலை செய்திருந்த போதும், வெள்ளவத்தைப் பொலிஸார் தன்னை மீண்டும் கைது செய்ததாகவும், வெள்ளவத்தைப் பொலிஸாரிடமிருந்து கொடிகாமம் பொலிஸாரே தன்னைப் பொறுப்பேற்றனர் எனவும், அது எவ்வாறு முடியும்?' என சுவிஸ் நாட்;டைச் சேர்ந்த 9 ஆவது சந்தேகநபர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பதலளித்த நீதவான்,
குற்றம் நடைபெற்ற இடத்தின் பொலிஸார் மாத்திரமே கைது செய்ய முடியும் என்ற நிபந்தனை இல்லை. நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள பொலிஸார் கைது செய்ய முடியும் என்றார்.
குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும், தாங்கள் குற்றம் செய்யவில்லையெனவும் தங்களை விடுதலை செய்யுமாறும் கோரினர்.
விசாரணை முடியவில்லை. பொலிஸாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், நீங்கள் குற்றவாளிகள் இல்லையென்றால் விடுதலை செய்யப்படுவீர்கள் என நீதவான் கூறினார். மேலும், தங்களுக்கு நோய்கள் உள்ளதாகவும், மருத்துவ உதவிகள் வேண்டும் எனவும் சந்தேக நபர்கள் கோரினர்.
அதற்கான வசதிகள் சிறைக்கூடத்தில் செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தும் போது, மருத்துவ உதவிகள் கிடைக்கும் என நீதவான் பதிலளித்தார்.
இந்த வழக்கின் 3 சந்தேகநபர்களை, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதற்கு கடந்த வழக்கு தவணையில் வழங்கிய அனுமதியை நீதவான் ஜனவரி 11ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துடன், அத்தினம் வரையில் மிகுதிச் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இவர்களில் 10 ஆவது சந்தேகநபர், கொழும்புக்குச் செல்வது கஸ்டமாக இருப்பதாகவும்,யாழ்ப்பாணச் சிறையில் வைத்து விசாரணை செய்யுமாறு கோரியதுடன், தன்னை தாக்குவதாகவும் அவர் கூறினார்.
விசாரணை கொழும்பில் தான் நடைபெறும் எனவும், யாரும் அடிக்கமாட்டார்கள் எனவும் நீதவான் கூறினார்.
21 minute ago
24 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
53 minute ago