2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அநாகரிகம்: சு.பசுப்பிள்ளை

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'கேள்விகளைக் கேட்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். அதுவே நாகரீகமானது. அதனைவிடுத்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது' என ஆளுங்கட்சி உறுப்பினர் சு.பசுப்பிள்ளை தெரிவித்தார்.  

உழவர் விழாவில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் நாகரிகமான முறையில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கேள்வி கேட்டார். ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களோ அநாகரிகமான முறையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போது, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் 8 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரiணையொன்று சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பசுபதிப்பிள்ளை மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மேற்படி பிரேரணை கொண்டு வந்த நாளான்று பேசுதற்காக 6 தடவைகள் நான் எழும்பியபோதும், அலைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் என்னைக் கண்டுகொள்ளவில்லை. கையெழுத்து வாங்குவதற்கு மட்டும் நாங்கள் தேவை. மற்றைய விடயங்களுக்கு எங்களை தள்ளி வைக்கின்றனர்' என சுட்டிக்காட்டினார்.

'எனக்கு தனிப்பட்ட முறையில் புதன்கிழமை (24) கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், விவசாய அமைச்சருக்கு எதிரான பிரேரணை நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது என குறிப்பிடப்பட்டிருந்ததாக' அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X