2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிளிநொச்சி புகையிரத நிலையப்பகுதியில் மழை நீர் வழிந்தோட வசதியில்லை

Gavitha   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி புகையிரத நிலையப்பகுதியில், மழை நீர் வழிந்தோடுவதற்கு வசதிகள் இன்மையால், குறித்த பகுதியிலிருந்து தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகரம் மீள்குடியேற்றத்தின் பின்னர், தொடரூந்துச் சாலை மற்றும் ஏ-9 சாலை உயர்வாகப் புனரமைக்கப்பட்டதன் காரணமாக திருமுறிகண்டி தொடக்கம் பரந்தன் உமையாள்புரம் வரை, மழை நீர் வழிந்தோடமுடியாததால், பொது இடங்களில் அப்படியே நீர் தேங்கி நிற்கின்றன.

இதேவேளை, மழை நீர் வீடுகளுக்குள் புகும் நிலமையும் அடிக்கடி ஏற்படுகின்றது.

கிளிநொச்சி நகரத்திலுள்ள கழிவறைகளின் கழிவுகள் மழை நீருடன் கலப்பதனால், தொற்றுநோய்கள் இயல்பாக பரவக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி நகரம் நாள்தோறும் பெருமளவு மக்கள் கூடும் நகரமாக இருப்பதன் காரணமாக, சிறந்த வடிகான் வசதிகளை உருவாக்கி தருமாறு நகரத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கிளிநொச்சி மாவட்டச்செயலர், கரைச்சி பிரதேச செயலர், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கு மனுக்கையளித்துள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .