2025 ஜூலை 16, புதன்கிழமை

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா

George   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்
 
இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா, சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியவில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஒப்புகொடுக்கப்பட்ட திருவிழா திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் திருவிழா, சனிக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை மாலை தேவாலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றதுடன் தேவாலயத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருவுருவ சிலைக்கு மலர், சந்தனம் மாலைகள் செலுத்தப்பட்டு திருப்பலி இடம்பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் இரு நாடுகளைச் சேர்ந்த அருட்தந்தைகளும் அருட் சகோதரிகளும் சிலுவையேந்தி தேவாலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப் பாதை நடத்தினர்.

இதில், இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இரவு முழுவதும் புனித அந்தோனியார் திருவுருவச் சிலைக்கு மலர் மாலைகளைச் செலுத்தி வழிபட்டனர். 

திருவிழாவில் இலங்கையிலுள்ள நெடுந்தீவு, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்கள், சிவகங்கை மறைமாவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், முதன்மை குருக்கள் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X