2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

சங்கானை காட்டுபுலம் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை சங்கானை மதுவரி திணைக்கள அதிகாரிகள், வியாழக்கிழமை (24) கைது செய்துள்ளனர்.

சங்கானை காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபரோருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.

போயா தினமான வியாழக்கிழமையன்று, காட்டுப்புலம் பாண்டாவட்டை பகுதியில் ஆள் நடமாட்டம் அற்ற இடத்தில் கசிப்பு காச்சுவது தொடர்பாக சங்கானை மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து திணைக்கள பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினராலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது குறித்த நபரிடமிருந்து 4 லீற்றர் கசிப்பும் அதனை காச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கானை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X