2025 ஜூலை 16, புதன்கிழமை

கசிப்பு காய்ச்சிய இடம் முற்றுகை: 50 லீற்றர் கசிப்பு மீட்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 

கிளிநொச்சி, கண்டாவளைக் காணியினுள் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை (21) சுற்றிவளைத்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தார்.
 
இதன்போது 6 பரல்களில் இருந்து 1260 லீற்றர் கோடா, 50 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன.
 
குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்ட போது அங்கு கசிப்புக் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் தப்பியோடியுள்ளனர்.
 
மோட்டார் சைக்கிள், ஏற்கெனவே கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
சந்தேகநபரைக் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X