Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், வடமாராட்சி பகுதியில், சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்டார்கள் எனும் குற்றசாட்டில் இரு பெண்களை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி துன்னாலை பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றுக் காலை குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது, வீட்டில் இருந்த ஆண் ஒருவர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் இருந்த இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், குறித்த வீட்டினுள் பொலிஸார் தேடுதலை மேற்கொண்ட போது, 115 லீற்றர் கோடா, 10 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தப்பி சென்றவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .