2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

Princiya Dixci   / 2021 நவம்பர் 01 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி. நிதர்ஷன்

ஊரெழு, பொக்கனைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரை, நேற்று (01) காலை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட பொக்கனைப் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாகப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த இடம் முற்றுகை இடப்பட்டது.

இதன்போது காசி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் 20 லீட்டருக்குக்கும் மேற்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன்,  சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .