2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஜேந்திரகுமாருக்கு நடந்தது என்ன? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2023 ஜூன் 04 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் புலனாய்வு அதிகாரி உட்பட சிவில் அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பொலிஸ் பாதுகாப்பு இன்றி பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் அவரது பாதுகாப்பிற்காக புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினுமு் இதன்போது, குறித்த நபர் எம்.பி.யை தாக்க முயற்சிப்பது மற்றும் வன்முறையாக நடந்து கொள்ளும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த காணொளியின் படி, அந்த பகுதியில்  சிவில் அதிகாரி ஒருவரிடம் எம்.பி., அடையாள அட்டையை கோருவது காணப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகம் செய்ததால் அடையாள அட்டையை வழங்க மாட்டேன் என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். 

எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்,

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திப்பதற்கு சென்ற போது, சந்தேகத்திற்கிடமான ஒருவர் அங்கு நடமாடிக் கொண்டிருந்த வேளை அதனை அவதானித்து குறித்த நபரிடம் நீங்கள் யார் என கேட்டபோது தன்னை ஒரு புலனாய்வு அதிகாரி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பகுப்பாய்வு அதிகாரி குறித்த புலனாய்வு அதிகாரியிடம் உங்கள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளார்.

இதன்போது அங்கு சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்குறித்த புலனாய்வு அதிகாரியிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய வேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்திருந்த உயர் பொலிஸ் அதிகாரியிடம், அடிப்படை சட்டம் தெரியாத பிரதேசத்திற்கு பொலிஸ் அதிகாரிகளை அனுப்ப வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் கூறியதை காணமுடிந்தது.

சம்பவம் தொடர்பில் அமைச்சர் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான உண்மைகளை திங்கட்கிழமை நீதிமன்றில் தெரிவிப்பதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .