2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா நுகர்ந்த மூவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பிரதேசங்களில், கஞ்சா போதைப்பொருளினை உடமையில் வைத்திருந்து நுகர்ந்த மூவரை, நேற்று  (26) இரவு கைது செய்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதடி பகுதியில் கஞ்சா நுகர்ந்துக்கொண்டிருந்த இளஞனைக் கைதுசெய்த மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸார், 26.56 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல், நாவற்குழி ஜயனார் கோயில் பகுதியில், கஞ்சா கலந்த சுருட்டு ஒன்றினை வைத்திருந்த 36 வயது இளைஞனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். தவிர, திருநெல்வேலி சந்திப்ப பகுதியில், 5 கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த அதே பகுதியினைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரும் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X