2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் கைதான சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Gavitha   / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இளவாலை குசுமன்துறை பகுதியில் 50 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைதான சந்தேகநபர்கள் இருவரையும் 96 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, செவ்வாய்க்கிழமை (01) அனுமதியளித்தார்.

மாதகல் கடல் பகுதியினை அண்மித்த குசுமன்துறை பகுதியில் ஹயஸ் வான் ஒன்றில் கொண்டு செல்ல தயாராக இருந்த 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 கிலோகிராம் கேரள கஞ்சாவினை இளவாலை பொலிஸார், திங்கட்கிழமை (31) மீட்டனர்.

அத்துடன் வாகனத்துடன், வவுனியா பகுதியினை சேர்ந்த 21 மற்றும் 31 வயதுடைய இரு வியாபாரிகளும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (01) ஆஜர்ப்படுத்திய போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்குரிய தடுப்புகாவல் கட்டளையினை பொலிஸார் மன்றில் கோரியிருந்தனர்.

மேலதிக விசாரணை மேற்கொண்டு, ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து 96 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்குரிய அனுமதியினை வழங்கினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X