Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்
நீர்வேலி வடக்கு பகுதியில், வானில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால், நேற்று (11) மாலை, மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில், நேற்று முன்தினம் (10) 4 பேர் கொண்ட கும்பலொன்று, 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை கடத்திச் சென்றதாக, அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார், மல்லாகம் பகுதியில் வைத்து, நேற்று மாலை யுவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி, குறித்த இளைஞனை நீண்ட நாள்களாக காதலித்து வந்ததாகவும் யுவதிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு இருந்த வேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும் இளைஞனும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025