2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடந்த வருடத்தைவிட அதிக மழை வீழ்ச்சி பதிவு

George   / 2016 மே 17 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 254.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார்.

'கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 217.05 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், இவ்வருடம் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு மேலாக உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இலங்கை முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை இப்போது இந்தியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் கனமழை குறைவடையும். ஆனால், இன்னும் 2 தினங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை நிலவும்.

அத்துடன், இக்காலத்தில் காற்றும் பலமாக வீசும். தரையில் 80 தொடக்கம் 90 கிலோமீற்றர் வேகத்திலும், கடலில் 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்திலும் காற்றுவீசும்.

இதனால், மீனவர்கள் எவரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. அங்கு 373.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது' என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X