Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா
கிராமிய உழைப்பைச் சுரண்டும் அதிக வட்டியுடன் கூடிய கடன் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். மாவட்ட கூட்டுறவாளர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி இன்று (27) காலை யாழில் இடம்பெற்றது.
யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, கண்டி வீதி ஊடக யாழ் மாவட்ட செயலகத்தை அடைந்து நிறைவடைந்தது.
பேரணியின் நிறைவில் யாழ். மாவட்ட கூட்டுறவாளர் அமைப்பினரால், யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
அதிகரித்துவரும் மக்களுடைய தேவைகளையும் அவற்றை இலகுவில் நிறைவேற்ற இயலாத நிலையைத் தோற்றுவித்துள்ள வேலையின்மை, போதிய ஊதியமின்மை, விலைவாசி உயர்வு ஆகிய பொருளாதார காரணிகளைப் பயன்படுத்தி மக்களுக்குள் ஊடுருவும் நுண் நிதிசார் எண்ணக்கருவானது உழைக்கும் மக்களைக் கடனாளிகளாக்குகின்றது.
இதனால் உயிரை மாய்த்துக்கொள்ளுதல், உறவுகளுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் வன்முறைகள் அதிகரிக்கின்றன. கட்டுப்பாடுகள் வரையறைகள் அற்ற மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கும் நுண்கடன் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் இத்தகைய கடன் வழங்கும் திட்டங்களை மக்களுக்குப் பாதிப்பற்ற வகையில் கூட்டுறவு அமைப்புகளுடாக மேற்கொள்ள வலியுறுத்தியும் இப் போராட்டம் இடம்பெற்றது.
20 minute ago
34 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
35 minute ago
1 hours ago