Gavitha / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா, கி.பகவான்
தேசிய கடல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோரங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்;. மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ நிஹால் உட்பட வடமாகாண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா, வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் மற்றும் யாழ். மாவட்டச் செயலக அதிகாரிகள், இராணுவம், பொலிஸ், கடற்படைகளின் அதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
கோட்டைப் பகுதியைச் சுற்றிக் காணப்படும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட தேவையற்ற முறையில் கடலிலும் கரையிலும் வீசப்பட்டு இருந்த பொருட்கள் அகற்றப்பட்டன.
இதேவேளை, சாவகச்சேரி கோகிலாக்கண்டி, கோயில்குடியிருப்பு பகுதியிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கையில் தென்மராட்சி பிரதேச செயலர் அ.சாந்தசிவன் கலந்து கொண்டார்.
தென்மராட்சி பிரதேசத்தில் கிளாலி முதல் நாவற்குழி வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025