2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கடற்படைத்தளம் அமைக்க 50 ஏக்கர் போதும்: அன்டனி ஜெகநாதன்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 03 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'வட்டுவாகல் பகுதியிலுள்ள 276 ஏக்கர் அரச காணியிலிருந்து ஐம்பது ஏக்கரைப் பெற்று அதில் கடற்படை தளமொன்றை அமைத்துக் கொள்ளலாம். அதற்காக 617 ஏக்கர் காணியினையும் சுவீகரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை' என வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த பெரேரா தலைமையிலான வட்டுவாகல் காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டத்திலேயே பிரதி அவைத்தலைவர் மேற்கண்டவாறு  கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'போர் நிறைவடைந்த பின்னர் கடற்படையினர் தனியாக வேலியமைத்து 617 ஏக்கர் காணியினையும் ஆக்கிரமித்துள்ளனர். இக்காணியிலிருந்து கடற்படையினர் முழுமையாக வெளியேறி நல்லாட்சிக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, நல்லாட்சிக்கான காலத்திலும் காணி சுவீகரிப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமையானது, போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X