2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி); செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள்,
'வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். இயந்திரப் படகுகள், வலைகள் என்பன போதியளவு இல்லாமை காரணமாக அம்மக்களது வாழ்வாதாரங்கள் மேம்படாத நிலையே காணப்படுகின்றது.

அத்துடன், கடற்றொழிலில் ஈடுபடும் மக்களின் வசதி கருதி பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியத் தேவைகள் இன்னும் நிலவுகின்றன. இவற்றை அவதானத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு முன் வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X