Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் தடையுத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து திட்டமிட்டபடி வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை (04), யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் தேசியக் கொடி ஏற்றும் போது போராட்டம் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்னால் ஏ-9 பிரதான வீதியை மறித்து கடற்றொழிலாளர் பிரச்சினையை முன்னிறுத்தி ஒன்றுகூடல் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பொலிஸாரால் வழங்கப்பட்டது.
எனினும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த சிவாஜிலிங்கம், இப்போராட்டம் கடற்றொழிலாளர் பிரச்சினையை முன்னிறுத்தியது அல்ல. ஆகவே, போராட்டத்தை தடுக்க இயலாது எனத் தெரிவித்து, போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெற்றது.
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago