2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கடற்தொழிலுக்கு சென்றவர் மரணம்

Editorial   / 2024 ஜனவரி 05 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

 யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் , திடீர் சுகவீனமுற்ற நிலையில் கரைக்கு அழைத்து வரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜூட் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடற்தொழிலுக்காக மேலும் மூவருடன் கடலுக்கு சென்ற நிலையில் ,   வியாழக்கிழமை (04) அதிகாலை 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். அதனை அடுத்து ஏனையவர்கள் படகினை திருப்பி கரைக்கு கொண்டு வந்து அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை (04)  உயிரிழந்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X