2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடற்படையின் நடவடிக்கையால் வீட்டுத்திட்டம் பறிபோகும் அபாயம்

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசாந்த்

கடற்படையின் நடவடிக்கையால், காரைநகர் - மடத்து வளவு மாதிரிக் கிராமத்துக்கு வரவிருக்கும் வீட்டுத்திட்டம் கிடைக்காமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளதென, அந்தப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், சிங்களக் குடியேற்றத்தை நிறுவுவதற்கு கடற்படையினர் எடுக்கும் முயற்சிகளை நிறுத்த, மக்கள் பிரதிநிதிகளும் உரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இந்த மாதிரிக் கிராமத்தை அண்டிய 126 ஏக்கர் காணி, தற்போது கடற்படையினர் வசம் உள்ளது. இதில் 76 ஏக்கர் நிலப்பகுதியை, கடற்படை ஏற்கெனவே சுவீகரித்துள்ளது. ஏனைய பகுதிகளை, எந்தக் காரணமும் இன்றித் தற்போதும் தம்வசம் வைத்துள்ளனர்.

“அந்தப் பகுதியில், அண்ணளவாக 6 ஏக்கர் காணியே மடத்து வளவு மாதிரிக் கிராமத்துக்குச் சொந்தமானதாக உள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் வழங்கும் திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளது.

“அதில் யாழ். மாவட்டத்துக்குரிய 24 வீடுகளை, மடத்து வளவு மாதிரிக் கிராமத்துக்கு வழங்குவதற்காக, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பொதுமக்களும் தமது கிராமத்துக்குச் செல்வதற்கு ஆயத்தமாக உள்ளனர். ஆனால், குறித்த பகுதியைக் கடற்படையினர் இதுவரை பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்காமல், முள்வேலி அமைத்துத் தம்வசம் வைத்துள்ளனர்.

“எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்த வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என்றால், குறித்தத் திட்டம் ஏனைய பகுதிக்குக் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது” எனவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .