2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘கடலட்டை, வயர் விவகாரங்களுக்கு அசமந்தபோக்கே காரணம்’

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடமராட்சி கிழக்கு கடலட்டை விவகாரம் என்றாலும் சரி, டான் குழுமத்தின் கேபிள் வயர்கள் அறுக்கப்பட்டமை என்றாலும் சரி, ஒருசில அதிகாரிகளின் அசந்தமப்போக்கே, அவற்றுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதியின் வலைந்தலைச் சந்திக்கு அண்மையில் அமைக்கப்பட்ட காரைநகர் வரவேற்பு வளைவை, நேற்று (11) மாலை திறந்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

“யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில், வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி கடலட்டை பிடிப்பதைத் தடுக்காது வேடிக்கை பாரத்த ஒரு சில அதிகாரிகளால், இன்று அப்பிரதேசத்தின் முழு வளமும் பறிபோகும் அபாயத்தில் உள்ளது” என்றார்.

அத்துடன், இதனைபோலவே, டான் குழுமத்தின் கேபிள் வயர்களும், வாடிக்கையாளர்களது நன்மையையோ அல்லது அந்த நிறுவனத்தின் பாதிப்புகளையோ கருத்தில் கொள்ளாது, ஒருசில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மூலம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .