2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடலாமைகளுடன் மீனவர்கள் கைது

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 ஆமைகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பாண கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வைத்து அப்பகுதியைச் சேர்ந்த 2 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 கடல் ஆமைகள் மீட்கப்பட்டன.

நெடுந்தீவு பகுதியில் வைத்து 2 ஆமைகளுடன் மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நால்வருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

உயிருடன் காணப்பட்ட ஆமைகள் ஐந்தையும் மீண்டும் கடற்பரப்பில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .