2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலுக்குச் சென்ற இருவரை காணவில்லை

எம். றொசாந்த்   / 2018 ஜூன் 13 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கேசன்துறை கடற்பரப்பில் இருந்து படகு மூலம் கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என உறவினர்களால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று (12) மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

காங்கேசன்துறை தையிட்டியை சேர்ந்த சின்னமணி இரத்தினசிங்கம் (வயது 62), டேவிட் ரேகன் (வயது 20) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

குறித்த இரு மீனவர்களும் திங்கட்கிழமை (11) மாலை தொழிலுக்குச் சென்ற நிலையில், நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை என முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளமையால் படகு திசை மாறியிருக்கலாம் எனவும், கடற்படையின் உதவியுடன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .